......................................................... .......................................................

இந்த ஆண்டு "உலகளாவிய Act 4SDGs வாரம் மற்றும்" ஐக்கிய நாடுகள் தினத்தை நினைவுகூரும் வகையில், ஆர்வமுள்ள கவிஞர்களை SUNFO அகரமுதலி தமிழ் ஆன்லைன் கவிதை போட்டி 2021 இல் கவிதைகளை சமர்ப்பிக்க அழைக்கிறோம். இந்த போட்டி UVA மாகாணத்தில் நிரந்தர குடியிருப்பாளர்களான இலங்கை குடிமக்களுக்கு திறக்கப்பட்டுள்ளது "(வயது குழுக்கள்: 11 முதல் 30 வயது வரை)"

Tuesday, August 31, 2021

Sustainable Development Goals - SDGs in Tamil


நிலைப் பேண்தகு அபிவிருத்தி இலக்குகள், வளங்குன்றா வளர்ச்சிக் குறிக்கோள்கள் அல்லது நிலையான அபிவிருத்திக்கான நோக்கங்கள் அல்லது உலகளாவிய குறிக்கோள்கள் (Sustainable Development Goals - SDGs),  என்பவை வருங்காலத்தில் பன்னாட்டு வளர்ச்சியானது எட்டவேண்டிய இலக்குகள் பற்றிய ஐக்கிய நாடுகள் சபையின் முன்மொழிவுகளாகும். இவை ஐக்கிய நாடுகளால் உருவாக்கப்பட்டு, நிலையான அபிவிருத்திக்கான உலகளாவிய நோக்கங்களாக ஊக்குவிக்கப்படுகின்றன. இவை 2015ஆம் ஆண்டின் இறுதியில் காலாவதியான புத்தாயிரமாண்டு வளர்ச்சிக் குறிக்கோள்களைப் பதிலீடு செய்வனவாகும். இது, 2016 ஆம் ஆண்டு முதல் 2030 ஆம் ஆண்டு வரையிலான பதினைந்து ஆண்டு காலத்திற்குரிய 169 குறிப்பிட்ட இலக்குகளுடன் கூடிய 17 பன்னாட்டு வளர்ச்சிக்கான குறிக்கோள்களைக் கொண்ட தீர்மானம் ஆகும்.

  • நிலைப் பேண்தகு அபிவிருத்தி இலக்குகள்
  • நிலையான வளர்ச்சி இலக்குகள்
  • வளங்குன்றா வளர்ச்சிக் குறிக்கோள்கள்

செப்டெம்பர் 25, 2015 அன்று ஐக்கிய நாடுகள் பொது அவையிலுள்ள 193 நாடுகள் "நமது உலகத்தை உருமாற்றுதல்" (Transforming our world) என்ற தலைப்பிலான 2030 வளர்ச்சி செயல்நிரலுக்கு ஏற்பளித்தன. இச்செயல்நிரலில் அடங்கியுள்ள 17 குறிக்கோள்களாவன:

  1. ஏழ்மை இன்மை: எல்லா இடங்களிலும், எல்லா வகைகளிலுமான ஏழ்மையை ஒழிக்க வேண்டும்.
  2. பசி இன்மை: பசியை ஒழித்தல், பட்டினியை விரட்டுதல், உணவுப் பாதுகாப்பை அடைதல், ஊட்டச்சத்து மேம்பாட்டையும் எய்துதல் மற்றும் நிலையான, வளங்குன்றா வேளாண்மையை ஊக்குவித்தல்.
  3. நல்ல ஆரோக்கியம்: எல்லோருக்கும், எல்லா வயதிலும், நலம்குன்றா உயிர்வாழ்வை உறுதிசெய்தலும், எல்லாருக்கும் எல்லா வயதிலும் நலவாழ்வை முன்னெடுத்தலும்.
  4. தரமான கல்வி: யாவரையும் உள்ளடக்கிய, சமவாய்ப்புள்ள, சமத்துவமான, தரமான கல்வியை உறுதிப்படுத்துதல், மற்றும் எல்லோருக்கும் வாழ்நாள் முழுதுமான கல்வி கற்றலுக்கான வாய்ப்பை ஊக்குவித்தல்.
  5. பாலின சமத்துவம்: பாலின சமத்துவம் அடைதல், மற்றும் அனைத்து பெண்கள், சிறுமிகளுக்கும் அதிகாரமளித்தலும்.
  6. தூய்மையான நீர் மற்றும் சுகாதாரம்: எல்லோருக்கும் நீரும், துப்புரவும் கிடைக்கச் செய்தலும் அவற்றை நீடிக்கத் தக்கவாறு சுகாதாரத்தின் நிலையான மேலாண்மை செய்தலும்.
  7. புதுப்பிக்கவல்ல மற்றும் மலிவான சக்தி: எல்லோருக்கும் மலிவான, நம்பகமான, நிலையான மற்றும் புதுமையான முறை ஆற்றல் (எரிசக்தி) கிடைப்பதை உறுதிசெய்து கொள்ளுதல்.
  8. நல்ல பணிகள் மற்றும் [பொருளாதாரம்|பொருளாதாரங்கள்]: எல்லோருக்கும் நிலையான, யாவரையும் உள்ளடக்கிய மற்றும் நிலையான, நீடிக்கத்தகு பொருளாதார வளர்ச்சி, முழுமையான, ஆக்கவளம் கொண்ட, கண்ணியமான பணி.
  9. புதுமை மற்றும் நல்ல உள்கட்டமைப்பு: தாங்கும் திறன் கொண்ட உள்கட்டமைப்புகளை உருவாக்குதல், உள்ளடக்கிய மற்றும் வளங்குன்றாத் தொழில்மயமாதலை முன்னெடுத்தல், புதுமையாக்கத்தைப் பேணி வளர்த்தல்.
  10. சமமின்மையை குறைத்தல்: நாடுகளுக்குள்ளேயும், நாடுகளுக்கிடையேயுமான சமமின்மையை, சமத்துவமின்மையைக் குறைத்தல்.
  11. நிலையான நகரங்கள் மற்றும் சமூகங்கள்: நகரங்களையும், மனித சமூகங்களையும், குடியிருப்புகளையும் எல்லாரையும் உள்ளடக்கிய, பாதுகாப்பானதாக, தாங்கும் திறன் கொண்ட, நீடிக்கத்தக்கனவாக ஆக்குதல்.
  12. வளங்களை பொறுப்பான முறையில் பயன்படுத்துதல்: நிலையான, நீடிக்கத்தகு முறையிலான நுகர்வு மற்றும் உற்பத்தியை, உற்பத்தி வடிவங்களை உறுதிசெய்து கொள்ளுதல்.
  13. வானிலை நடவடிக்கை: காலநிலை மாறுபாட்டையும் அதன் பாதிப்புகளையும் எதிர்கொள்ளக்கூடிய வகையிலான உடனடி நடவடிக்கை எடுத்தல்.
  14. நிலைப்பாடுடைய பெருங்கடல்கள்: பெருங்கடல்கள், கடல்கள் மற்றும் கடல்சார் வளங்களைப் பேணுதலும், வளங்குன்றா வளர்ச்சிக்காக அவற்றை நீடிக்கத்தகுந்த விதத்தில் பயன்படுத்தலும்.
  15. நிலத்தின் நிலைப்பாடான பயன்பாடு: நில சூழலியல் அமைப்புகளை பாதுகாத்து, மீட்டமைத்து, அவற்றின் நீடித்த பயன்பாட்டை ஊக்குவித்தல், நீடிக்கத்தக்கவாறு காடுகளை நிலைப்பாடான முறையில் நிர்வகித்தல், பாலைவனமாதலுக்கு எதிராகப் போரிடல், நிலச் சீர்கேட்டைத் தடுத்து மீட்டமைத்தல், மற்றும் பல்லுயிர் இழப்பைத் தடுத்து நிறுத்துதல்.
  16. அமைதி மற்றும் நீதி: நிலையான, வளங்குன்றா வளர்ச்சிக்காக அமைதியான, யாவரையும் உள்ளடக்கிய சமூகங்களை உருவாக்குதல், அனைவருக்கும் நீதி கிடைக்கச் செய்தல், எல்லா நிலைகளிலும் சிறப்பான, பொறுப்பான மற்றும் உள்ளடக்கிய சூழல்களை உருவாக்குதல். செயல்திறமிக்க, பதிலளிக்கும் பொறுப்புடைய, யாவரையும் உள்ளடக்கிய நிறுவனங்களை எல்லா மட்டங்களிலும் ஏற்படுத்துதல்.
  17. நிலையான அபிவிருத்திக்கான கூட்டமைப்புகள்: நிலையான அபிவிருத்திக்காக செயல்பாட்டு முறைகளை பலப்படுத்துதல், வளங்குன்றா வளர்ச்சிக்கான உலகளாவிய கூட்டமைப்புகளுக்கு புத்துயிர் அளித்தல்.

No comments:

SUNFO AGARAMUTHALI Awards Category

SUNFO அகரமுதலி உயரிய விருதுகள்  (SUNFO AGARAMUTHALI Heights Awards) SUNFO அகரமுதலி சமூக வலைத்தள பகிர்வுக்கான விருதுகள்  (SUNFO AGARAMUTHALI ...