......................................................... .......................................................

இந்த ஆண்டு "உலகளாவிய Act 4SDGs வாரம் மற்றும்" ஐக்கிய நாடுகள் தினத்தை நினைவுகூரும் வகையில், ஆர்வமுள்ள கவிஞர்களை SUNFO அகரமுதலி தமிழ் ஆன்லைன் கவிதை போட்டி 2021 இல் கவிதைகளை சமர்ப்பிக்க அழைக்கிறோம். இந்த போட்டி UVA மாகாணத்தில் நிரந்தர குடியிருப்பாளர்களான இலங்கை குடிமக்களுக்கு திறக்கப்பட்டுள்ளது "(வயது குழுக்கள்: 11 முதல் 30 வயது வரை)"

Conditions

SUNFO அகரமுதலி தமிழ் நிகழ்நிலை கவிதைப்போட்டி 2021

தொனிப்பொருள்

"நிலவும் கொரோனா கொவிட்-19 தொற்று நிலைமையுடன் 
நிலைப்பேண்தகு அபிவிருத்தி இலக்குகளை அடைதல்."


போட்டிக்கான விதிமுறைகள் 


Rules and Regulations in English Click here

01. அறிமுகம்.

2021 ஆம் ஆண்டிற்கான "SUNFO அகரமுதலி தமிழ் கவிதைப்போட்டியினை " ஊவா மாகாணத்தின் பதுளை, மொணாரகலை மாவட்டங்களிலும், மத்திய மாகணத்தின் நுவரெலியா மாவட்டத்திலும், சப்ரகமுவ மாகாணத்தில் இரத்தினபுரி மாவட்டத்திலும் நடத்த நடத்துவதற்கு தீர்மானித்துள்ளது. இக்கவிதைப் போட்டியினை நாட்டில் தற்போது நிலவி வரும் கொவிட்-19 அசாதாராண சூழ்நிலையினை கருத்தில் கொண்டு நிகழ்நிலையில் (Online) மூலம் சில வரையறைகளுக்கு உட்பட்டு நடத்துவதற்கு SUNFO பசறை இளைஞர் அணி ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளது.

02கவிதைப் போட்டியின் தலைப்பு.

  • நிலைப்பேண்தகு அபிவிருத்தி இலக்குகள் 17ல் ஏதாவது ஒரு இலக்கை தெரிவு செய்து இவ்விலக்கை  அடிப்படையாகக் கொண்டு "நிலவும் கொரோனா கொவிட்-19 தொற்று நிலைமையுடன்  நிலைப்பேண்தகு அபிவிருத்தி இலக்குகளை அடைதல்"என்ற தொனிப்பொருளுக்கமைய விரும்பிய தலைப்பினை தெரிவு செய்யவேண்டும்.
(போட்டியாளர்கள் விரும்பிய தலைப்பினை தெரிவுசெய்யலாம். தெரிவு செய்யப்படும் கவிதைகள் எமது தொனிப்பொருளுக்கு அமைவாக இருத்தல் வேண்டும்.)
  • நிலைபேண்தகு அபிவிருத்தி பற்றி மேலதிகமாக தெரிந்துக்கொள்ள.....
  • 17 இலக்குகள் பற்றி மேலதிகமாக அறிந்துக்கொள்ள....

03. பதிப்புரிமை.

  • சிறந்த முறையில் அமையப்பெறும் கவிதைகள் தெரிவு செய்யப்பட்டு நூலாக தொகுத்து வெளியிடப்படும் பதிப்புரிமை SUNFO விற்கு உரியது.
04. போட்டியாளர்கள் தெரிவுசெய்யப்படும் முறை.
  • இலங்கையின் தலைசிறந்த நடுவர் குழுவின் மூலமாக கவிதைகள் பரிசீலிக்கப்பட்டு வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்படுவார்கள்.

05. வயது எல்லை.

  • வயதெல்லை 11 தொடக்கம் 30 வயது வரையிலானவர்களுக்கு 05 பிரிவுகளில் நடைபெறும்.
    • பிரிவு – 1,    வயது எல்லை 11 – 13      Child Juniors.
    • பிரிவு – 2,    வயது எல்லை 14 – 16      Child Seniors.
    • பிரிவு – 3,   வயது எல்லை 17 – 19      Young Juniors.
    • பிரிவு – 4,    வயது எல்லை 20 – 23      Young Seniors.
    • பிரிவு – 5,    வயது எல்லை 24 – 30      Super Seniors.
06. மாகாணம்.
  • ஊவா மாகாணத்தின் பதுளை,மொணாரகலை மாவட்டங்களிலும் மத்திய மாகணத்தின் நுவரெலியா மாவட்டத்திலும் சப்ரகமுவ மாகாணத்தில் இரத்தினபுரி மாவட்டத்தில் சேர்ந்தவர்கள் மாத்திரமே இக்கவிதை போட்டியில் பங்குபற்ற முடியும்.
07. மொழி மூலம்.
  • தமிழ் மொழி மாத்திரம்
  • 01.09.2021
  • 22.09.2021
10.போட்டியாளர்கள் விண்ணப்பிக்கும் முறை.
  • இந்த இணைப்பினை (Register Here) மூலம் உங்கள் விண்ணப்பங்களை அனுப்புதல் வேண்டும்.
  • ஆங்கில மொழியில் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்புதல் வேண்டும்.
  • உங்கள் பெயர் மற்றும் பதிவு இலக்கத்தை சரி பார்த்து கொள்ள வேண்டும்.

11. போட்டியாளர்கள் தங்கள் படைப்புக்களை சமர்ப்பிக்கும் கால எல்லை.

  • பதிவு செய்யப்பட்டப் போட்டியாளர்கள் தங்களது கவிதை ஆக்கங்களை 2021.09.18 தொடக்கம் 2021.09.28 வரையிலான காலப்பகுதிக்குள் சமர்பித்தல் வேண்டும்.

12. போட்டியாளர்கள் தங்கள்  படைப்புக்களை சமர்ப்பிக்கும் முறை.

  • பின்வரும் நிகழ்நிலை (Online) முகவரியில் மாத்திரம் பதிவேற்றப்படல் வேண்டும்.
    •  பதிவேற்றம் (Upload) 18.09.2021 - 23.10.2021

  • போட்டியாளர்கள் தங்களது கவிதைகளை சமர்ப்பிக்கும் போது தங்களுக்கு வழங்கப்பட்ட பதிவு இலக்கத்தை (Register No) பயன்படுத்துவது கட்டாயமாகும். மாறாக பெயரை பயன்படுத்தும் கவிதைகள் நிராகரிக்கப்படும்.(பதிவிலக்கத்தை உறுதிசெய்துக் Member பக்கத்தை பார்வையிடவும்.)

  • தங்கள் கவிதைகள் உரிய முறையில் பரிசீலனை செய்யப்பட்டப்பின் எமது உத்தியோகப்பூர்வ வலைத்தளத்தில் (Blog) பிரசுரிக்கப்படுவதோடு முகப்புத்தகத்திலும் (Facebook) பிரசூரிக்கப்படும். (01.10.2021 - 20.10.2021)

13. போட்டியாளர்களின் படைப்புக்கள் பரிசீலனை செய்யப்படும் காலப்பகுதி.

  • 25.09.2021 - 21.10.2021

14. வெற்றியாளர்கள் அறிவிக்கப்படும் திகதி.

  •  24.10.2021 (UN Day) ஐக்கிய நாடுகள் தினத்தன்று.

  • எமது முகப்புத்தக பக்கத்தில் பதிவேற்றப்படும் கவிதைகளில் அதிக Like, comments, Share செய்யப்படும் கவிதைகளுக்கு சிறப்பு விருதுகள் வழங்கப்படும். (02.10.2021 - 20.10.2021)

  • மக்கள் விருது தவிர்ந்த ஏனைய அனைத்து விருதுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் தெரிவு செய்யப்படும் போது 
    முகப்புத்தகத்தின் வாசகர்களின் விருப்பு மற்றும் சிறப்பான கருத்து என்பன செல்வாக்கு செலுத்தாது.

15சான்றிதழ் மற்றும் விருதுகள்.

15.1. SUNFO அகரமுதலி உயரிய விருதுகள் (SUNFO AGARAMUTHALI Heights Awards)

  • சிறந்தப் படைப்புகளுக்கான SUNFO அகரமுதலி உயரிய விருதுகள் வழங்கப்படும்.
  • உயரிய விருதுகளின் வகைகள் வெகுவிரைவில் அறிவிக்கப்படும். 

15.2. SUNFO அகரமுதலி படைப்பாற்றலுக்கான விருது. (SUNFO AGARAMUTHALI Creativity Awards.)

  • நிலைப்பேண்தகு இலக்குகளை மையமாகக் கொண்டு எழுதுப்பட்டுள்ள கவிதைகளுக்கு படைப்பாற்றலுக்கான  விருது வழங்கப்படும். 
  • விருதுகளின் வகைகள். 
    • சிறந்த பொருளாதார மேம்பாட்டு கவிதைக்கான விருது. (SDG Goals 8, 9, 10, 12) இந்த SDG இலக்குகள் கவனம் செலுத்தப்படும்.
    • சிறந்த சமூக  எழுச்சி கவிதைக்கான விருது. (SDG Goals 1, 11, 16, 7, 3, 4, 5, 2) இந்த இலக்குகள் கவனம் செலுத்தப்படும்.
    • சிறந்த சுற்றுச்சூழல் மேம்பாட்டு கவிதைக்கான விருது. (SDG Goals 15, 14, 13, 6) இந்த இலக்குகள் கவனம் செலுத்தப்படும்.
    • சிறந்த பொதுநலன் மேம்பாட்டு கவிதைக்கான விருது.(SDG Goals 17) இந்த இலக்கு கவனம் செலுத்தப்படும்.
  • ஓவ்வொரு இலக்கிலும் 04 சிறப்பு விருதுகள் (Creativity Awards ) வழங்கப்படும். குறித்த இலக்குகளில் கவிதைகள்  சிறப்பாக அமையாவிடின்  தெரிவு செய்யப்படமாட்டாது. 
  • நிலைப்பேண்தகு இலக்குகள் (SDG) சம்பந்தமான தகவல்களை பெற்றுக்கொள்ள எமது உத்யோகப்பூர்வ செய்தித்தளத்தை பார்வையிடவும். (News)
15.3.    SUNFO அகரமுதலி சமூக வலைத்தள பகிர்வுக்கான விருது.  (SUNFO AGARAMUTHALI Social Media Award.)
  • தெரிவுசெய்யப்படும் ஒவ்வொரு வயதுப் பிரிவிலும் மூன்று போட்டியாளர்களுக்கு  SUNFO அகரமுதலி சமூக வலைத்தள பகிர்வுக்கான விருது வழங்கப்படும்.

15.4. SUNFOஅகரமுதலி பங்குப்பற்றுதலுக்கான சான்றிதழ்SUNFO AGARAMUTHALI Participation Certificate.

  • பங்குப்பற்றும் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும், கொரோனா Covid-19. தொற்றுநோய் காரணமாக E-Certificate ஆக வழங்கப்படும்.

15.5. SUNFOஅகரமுதலி விருதுகள்.

நிலவும் கொவிட்-19 நோய்த்தொற்று பிரச்சனை காரணமாக மேற்குறிப்பிட்ட விருதுகள் அனைத்தும் E-Certificate ஆக மாத்திரமே வழங்கப்படும்.

16. போட்டியாளர்கள் கவிதை எழுதும் போது கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள்.

16.1. கவிதை சொந்த படைப்பாகவும் இதற்கு முன் வேறு எங்கும்    வெளியிடப்படாததாகவும் இருத்தல் வேண்டும். 
(ஆள்மாறாட்டம் போன்ற முறைகேடான விடயங்கள் நிரூபிக்கப்படும் பட்சத்தில் வழங்கப்பட்ட பரிசு மீளப் பெற்றுக் கொள்ளப்படும் என்பதையும் போட்டியாளர்கள் கவனத்தில் கொள்ளவும்)  
 
16.2. ஒரு போட்டியாளரால் ஒரு கவிதை மாத்திரமே சமர்ப்பிக்க   முடியும்.
 
16.3. கவிதை வரிகளின் எண்ணிக்கை கீழ்வரும் பிரிவுகளின் அடிப்படையில் அமைதல் வேண்டும். 

  • 01.பிரிவு 08 முதல் 12 வரிகளுக்கு இடைப்பட்டதாக இருத்தல் வேண்டும். (Child Juniors) 
  • 02.பிரிவு 12 முதல் 16 வரிகளுக்கு இடைப்பட்டதாக இருத்தல் வேண்டும். (Child Seniors) 
  • 03.பிரிவு 16 முதல் 20 வரிகளுக்கு இடைப்பட்டதாக இருத்தல் வேண்டும். (Young Juniors) 
  • 04.பிரிவு 20 முதல் 24 வரிகளுக்கு இடைப்பட்டதாக இருத்தல் வேண்டும். (Young Seniors) 
  • 05.பிரிவு 24 முதல் 28 வரிகளுக்கு இடைப்பட்டதாக இருத்தல் வேண்டும். (Super Seniors)

16.4. போட்டிக்காக சமர்பிக்கப்படும் கவிதைகளின் வரிகள் இனவெறியை தூண்டுதல்,பாலியல் இச்சையை தூண்டுதல் மற்றும் பிறரை துன்புறுத்தல் போன்ற அடிப்படைகளை கொண்டிருத்தல் கூடாது.

16.5யார் மனதையும் புண்படுத்துவதாகவோ மத சிந்தனைகள், போதைப்பொருள் பாவனை மற்றும் சட்டத்துக்கு புறம்பான செயல்களை ஊக்குவித்தல் தொடர்பான உள்ளடக்கங்கள் கொண்டதாக கவிதை அமைய கூடாது.

16.6. வெறுப்பினை  ஏற்படுத்தல், வன்முறை, அவதூறு ஏற்படுதல் அல்லது செயல்முறை குற்றங்கள் சம்பந்தமான வரிகள் உள்ளடங்க கூடாது.

16.7. கவிதையுடன் ஒரு விளக்கப்படம் / புகைப்படம் (விரும்பினால்) இருக்கலாம்.

 

 
குறிப்பு : பதிவு செய்தல் மற்றும் கவிதைகளை சமர்பித்தல்.

sunfouva@gmail.com | https://atpoc.blogspot.com/
+94 76 725 5575 | +94 777 516 918




SUNFO AGARAMUTHALI Awards Category

SUNFO அகரமுதலி உயரிய விருதுகள்  (SUNFO AGARAMUTHALI Heights Awards) SUNFO அகரமுதலி சமூக வலைத்தள பகிர்வுக்கான விருதுகள்  (SUNFO AGARAMUTHALI ...